கிழக்கு ஆளுனரின் உத்தியோகபூர்வ இல்லமருகில் நேற்றைய தினம் இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுத்திகரிப்புத் தொழிலாளி இவ்வாறு கைக்குண்டுகள் காணப்படுவதைக் கண்டு தகவல் தெரிவித்ததையடுத்து விசேட அதிரடிப்படையினர் விரைந்து அவற்றை மீட்டு செயலிழக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment