இலங்கை இராணுவத்துக்கு வழங்கி வரும் பயிற்சி மற்றும் இராணுவ உதவிகளுக்கு மேலதிகமாக விரைவில் யுத்த கப்பலை சீனா பரிசளிக்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ அகடமியில் சீன நிதியுதவியில் நவீன உள்ளக அரங்கொன்றும் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையுடனான உறவு பலமான நிலையில் நிலவுவதாகவும் பல தசாப்தங்களாகவே சீனா இலங்கையின் உற்ற நண்பனாகத் திகழ்வதாகவும் அந்நாட்டின் இராணுவ பிரதானி தெரிவிக்கிறார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டுள்ள சீனா, கொழும்பு துறை முக நகரின் ஆளுமையையும் தக்க வைத்துக்கொண்டுள்ளதான் மூலம் இந்து சமுத்திரத்தில் தமது பலத்தை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment