ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் தவிர ஏனைய ஏழு மாகாண சபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜனவரியில் நடாத்தும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நீண்டகாலம் இழுத்தடித்து அரசு படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் விவகாரமும் இழுபறிக்குள்ளாகியுள்ளது.
எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை போன்ற காரணங்களை முன் வைத்து அமைச்சர் தரப்பில் ஒரு கருத்தும் கட்சித் தலைவர்கள் மத்தியில் வேறு கருத்தும் நிலவுவதால் உடன்பாட்டைக் காண முடியாத சூழ்நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment