இலங்கையின் அபிவிருத்திக்கு திறந்த மனதுடன் உதவ முடியாத சக்திகளே சீன உதவியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை முடக்கி அடக்கியாள முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளது சீனா.
கடன் வழங்குவதன் மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை சீனா தமது ஆளுமைக்குட்படுத்தி ஆக்கிரமித்து வருவதாக அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் இலங்கையும் அவ்வாறே சீனாவின் கடன் வலையில் வீழ்ந்துள்ளதாக அண்மையில் நியுயோர்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டிருந்தது.
இந்நிலையிலேயே சீனா இவ்வாறு விளக்கமளித்துள்ளதுடன் இலங்கையின் அபிவிருத்திக்கான கூட்டுறவைத் தாம் தொடரப்போவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment