தங்க இறக்குமதி மீது வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும் இறக்குமதி அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதிலிருந்து அரசாங்கம் எவ்வித பயனையும் பெறாத நிலையில் இதன் பின்னணியில் ஊழல் இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார் கூட்டு எதிர்க்கட்சியின் பந்துல குணவர்தன.
சுமார் 1087 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க இறக்குமதி (126 வீத அதிகரிப்பு) இடம்பெற்றிருக்கின்ற அதேவேளை மீள் ஏற்றுமதி எதுவுமில்லையெனவும் தங்க வர்த்தகத்துறை அபிவிருத்தியடையவுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தங்க இறக்குமதி மீதான வரி விதிப்பு தங்கக் கடத்தலை ஊக்குவிக்கும் எனவும் முன்னர் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment