பிணை கோரி அமித் வீரசிங்க சிறைச்சாலையில் உண்ணாவிரதம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 12 July 2018

பிணை கோரி அமித் வீரசிங்க சிறைச்சாலையில் உண்ணாவிரதம்!



தன்னைப் பிணையில் விடுவிக்கக் கோரி சிறைச்சாலையில் இனவாதி அமித் வீரசிங்க உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மூன்று மாதங்களாக தன்னை சிறையிலடைத்திருப்பதாகவும் பிணை வழங்குமாறும் கோரி நேற்று மதியம் முதல் அமித் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை வழிநடாத்திய அமித் வீரசிங்க உட்பட்ட சிலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment