கொழும்பு-12 வாழைத் தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலும் அதன் பைதுல்மால் நிறுவனமும் தேசிய இரத்த வங்கியுடன் இணைந்து 5வது தடவையாகவும் இன்று (15) இரத்தான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியில் பள்ளிவாசலின் தலைவர் இஸ்மத் ஹாஜி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மூவினத்தையும் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இந்த இரத்தான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர்களான பி. சமரசிங்க மற்றும் என்.ரனசிங்க உள்ளிட்ட வைத்திய மற்றும் தாதியர் குழுவினர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment