புதிய தேர்தல் முறை வேண்டாம்: ஹக்கீம் - ரிசாத்! - sonakar.com

Post Top Ad

Saturday, 7 July 2018

புதிய தேர்தல் முறை வேண்டாம்: ஹக்கீம் - ரிசாத்!


மாகாண சபைகள் தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய தேர்தல் முறை வேண்டாம் எனவும் அது சிறுபான்மை மக்களைப் பெரிதும் பாதிக்கிறது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளனர்.


18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து மஹிந்த ராஜபக்சவை வாழ்நாள் ஜனாதிபதியாக மாற்ற இணங்கிக் கொண்ட முஸ்லிம் கட்சிகள், மஹிந்தவுக்கு எதிராக மக்கள் அலை திரண்ட பின்னர் தாம் முன்னர் தவறு செய்ததாக தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, புதிய முறைமையில் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நீண்ட இழுபறிக்குப் பின் சந்தித்த அரசும் பங்காளிக் கட்சிகளும் பின்னடைவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment