விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளவும் கொண்டுவருவதே முக்கிய நோக்கம் என அண்மையில் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.
சபாநாயகர் இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் தற்போது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த விவகாரத்தின் பின்னணியில் விஜயகலா தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ள அதேவேளை அவர் நாட்டை விட்டு தப்பியோடப் போவதாக உதய கம்மன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment