மருதமுனை சிறுவர் பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Monday, 16 July 2018

மருதமுனை சிறுவர் பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை


மருதமுனை சிறுவர் பூங்கா மற்றும் கடற்கரை சூழல், கல்முனை கடற்கரைப் பள்ளி வெளியரங்கு என்பவற்றை அனைத்து வசதிகளுடனும் மேலும் அழகுபடுத்தி மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனையின் பேரில் கல்முனை மாநகர சபையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்பு செயலாளர் ரவூப் ஹஸீர் முன்னிலையில் மாநகர முதல்வர்  சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.


இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.உமர் அலி, எம்.எஸ்.எம்.சத்தார், சட்டத்தரணி றோஷன் அக்தர், ஏ.எம்.பைரூஸ், எம்.எம்.நிசார், மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர்களான ரி.சர்வானந்தன், ஏ.எம்.சாஹிர் உட்பட அமைச்சின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கல்முனை கடற்கரைப் பள்ளி வெளியரங்கு, மருதமுனை சிறுவர் பூங்கா மற்றும் கடற்கரை சூழல் போன்றவற்றின் நிர்மாணப் பணிகளிலுள்ள குறைபாடுகள், தேவைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுடன் அவற்றை இன்னும் கவர்ச்சிகரமாக அழகுபடுத்தி, மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. 

இதற்குத் தேவையான மேலதிக நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தயாராக இருப்பதாக தெரிவித்த அவரது இணைப்பு செயலாளர் ரவூப் ஹஸீர், இவற்றை தரமாகவும் குறைந்த செலவிலும் முன்னெடுக்கக் கூடிய மூலோபாயங்கள் குறித்த ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து இவர்கள் குறித்த இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து, மேம்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

-அஸ்லம் எஸ்.மௌலானா

No comments:

Post a Comment