ஊழல்வாதிகளை தண்டிக்கப் போவதாகக் கூறி பதவியேற்ற அரசாங்கம் உருப்படியாக எதையும் செய்ய முடியாமல் தவிப்பது கவலையளிப்பதாக தெரிவிக்கின்ற சரத் பொன்சேகா, மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசில் நிகழ்ந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்கப் போவதாக தெரிவித்து ஆட்சி பீடமேறிய ஸ்ரீலசுக - ஐ.தே.க கூட்டரசு, விசாரணைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை தொடர்கிறது.
இழுபறியோடு கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஆளுந்தரப்பு படுதோல்வியடைந்திருந்த நிலையில் மஹிந்த அரசின் ஊழல்களை துரிதமாக விசாரிக்க விசேட நீதிமன்றங்கள் இயங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment