கட்டுநாயக்க மற்றும் ஏனைய விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்கள் பறக்கவிடுவதை, இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு, சிவில் விமான சேவைகள் அதிகார சபை, சிறுவர்களையும் பொதுமக்களையும் அறிவுறுத்தியுள்ளது.
விமான நிலையங்களிலிருந்து ஐந்து கிலோ மீற்றர் எல்லைக்குள், விசேடமாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் பட்டங்களைப் பறக்கவிடுவது, சட்டவிரோதமான செயல் என்பதுடன் பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என, சிவில் விமான சேவைகள் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பட்டங்களைப் பறக்கவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நூல், உயரத்தில் ஆங்காங்கே சிக்குவதால், விமானத்தின் பல்வேறு பாகங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனவே, விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களைப் பறக்கவிடும்போது, அதிக அவதானத்துடனும், பொறுப்புடனும் செயற்படுமாறு, சிறுவர்களையும் பொதுமக்களையும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை மேலும் அறிவுறுத்தியுள்ளது.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment