கட்டுநாயக்கவில் உள்நாட்டு விமான சேவையையும் இணைக்கத் திட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday, 19 July 2018

கட்டுநாயக்கவில் உள்நாட்டு விமான சேவையையும் இணைக்கத் திட்டம்


கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரத்யேக உள்நாட்டு விமான சேவைகளுக்கான டேர்மினல் ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


சுற்றுலாப் பயணத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் கட்டுநாயக்கவில் இவ்விஸ்தரிப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் ஹிங்குராகொடயிலும் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கூட்டாட்சி அரசு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment