நோர்வே பெண்ணிடம் அத்துமீறல்; கிரிக்கட் வீரரின் நண்பர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 23 July 2018

நோர்வே பெண்ணிடம் அத்துமீறல்; கிரிக்கட் வீரரின் நண்பர் கைது!


நோர்வே பெண் (23) ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பிரித்தானிய பிரஜையுரிமை கொண்டுள்ள இலங்கையர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இலங்கை தேசிய அணியின் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலகவின் நண்பர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் நாவலயில் வசித்து வந்த நிலையில் குறித்த நபர் கொல்லுபிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றதாக குறித்த பெண் விமான நிலைய பொலிசில் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment