கொலை, போதைப் பொருள் வியாபார நடவடிக்கைகளின் பின்னணியில் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலக பேர்வழி ரத்னா ஏக்கலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அச்சந்தர்ப்பத்தில் குறித்த நபர் கைக் குண்டொன்றையும் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சியில் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ள அதேவேளை மஹிந்த ஆட்சியிலேயே பாதாள உலகத்தினர் பாதுகாக்கப்பட்டதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment