இயல்பான அபிவிருத்திக்கும் போராட வேண்டியுள்ளது: இம்ரான் - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 July 2018

இயல்பான அபிவிருத்திக்கும் போராட வேண்டியுள்ளது: இம்ரான்


முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்ககூடிய முஸ்லிம் அதிகாரிகளை உருவாக்க வேண்டியது எமது சமூகத்தின் கடமை என கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று புதன்கிழமை காலை கிண்ணியா பூவரசன்தீவு அல்மினா வித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் அமைக்கப்படவுள்ள இரண்டுமாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


இன்றைய காலத்தில் சமூகத்தில் ஏற்படும் குறைபாடுகள் அனைத்துக்கும் அரசியல்வாதிகளை குற்றம்சாட்டுகின்ற நிலைமையே காணப்படுகிறது. ஆனால் இதில் உள்ள எதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் உணர மறுக்கின்றனர். இன்று ஒரு சாதாரண பெரும்பான்மை இனத்தவர் அரச அலுவலங்களுக்கு சென்று முடிக்கும் வேலைக்கும் எமது சமூகத்தவர்கள் அரசியல்வாதிகளையே எதிர்பார்கின்றனர்.

இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் பெரும்பாலான அரச அலுவலகங்களில் முக்கிய பொறுப்புகளில் எமது சமூகத்தை சேர்ந்த யாரும் இல்லை. இதனால் அந்த சமூகத்தினருக்கு இயல்பாகவே கிடைக்கும் அபிவிருத்திகளுக்கு எமது சமூகம் அரசியல் ரீதியாக போராடியே அதை பெற வேண்டியுள்ளது.

எமது சமூகத்தினர் முக்கிய பதவிகளில் காணப்படின் அரசியல்வாதிகளின் துணை இன்றியே பல அபிவிருத்திகளை நாம் கொண்டுவர முடியும். அவ்வாறு காணப்படின் எமது நேரமும் மீதமாகும். நாமும் பெரும்பான்மை அரசியல்வாதிகளை போல் பாரிய திடங்களை எமது சமூகத்துக்கு கொண்டுவர எமது நேரங்களை செலவிட முடியும்.
கடந்த காலங்களில் எமது சமூகம் கல்வியில் அக்கறை செலுத்த தவறியமையே இதற்கான பிரதான காரணமாகும். இதனாலேயே முஸ்லிம்களின் சனத்தொகை சதவீதத்தை விட அதிக கைதிகள் வெலிக்கடை சிறைசாலையிலும் சனத்தொகை சதவீதத்தை விட மிக குறைவானோர் அரச தினைக்களிங்களிலும் உள்ளனர்.

ஆகவே இது ஒரு சமூக பொறுப்பு எமது சமூகத்தின் கல்வித்தரத்தை அதிகரிப்பதன் மூலமே எமது சமூகத்தின் தரத்தையும் அதிகரிக்கலாம்.

ஆனால் கல்வியில் அரசியல்தலையீடு கானப்படுபதால் எமது கல்வி பின்னடைவு காண்பதாக சில குற்றச்சாட்டுக்களும் உள்ளன. ஆனால் நான் அதிகாரத்தில் இருக்கும் இந்த ஆறு வருடங்களிலும் தகுதியற்ற யாருக்கும் நான் சிபாரிசு செய்து அதிபர், ஆசிரிய ஆலோசகர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கல்வில்லை என்பதை இங்கு பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இதே போன்று ஏனைய அரசியல்வாதிகள் சமூகத்தலைவர்கள் ஒற்றுமைபட்டு சுயாதீன கல்வித்துறை ஒன்றை ஏற்படுத்த முன்வர வேண்டும். அதன்மூலம் எமது சமூகத்தில் இருந்து அரச உயர் அதிகாரிகளை உருவாக்கி எமது சமூகத்தில்   காணப்படும் இந்த புற்றுநோயை அழிக்க வேண்டும்.

எனது தந்தையால் ஆரம்பிக்கப்பட இந்த பாடசாலைக்கு நான் விஜயம் செய்து இந்த பாடசாலை நிர்வாகத்திடம் கொடுத்த வாக்குறுதிக்கமைய இந்த கட்டிடம் கட்டப்பட்டு இன்று பாடசாலையின் முதலாவது மாடி கட்டிடமாக அமையவுள்ளது.

இப்போது நான் கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன். இந்த பதவியின் மூலம் எமது மக்களுக்கு உச்சகட்ட சேவையை இன மத பிரதேச வேறுபாடின்றி வழங்க தயாராக உள்ளேன். ஆகவே இதற்காக என்னுடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

கடந்த அரசாங்கத்தில் எவ்வாறானான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் பாடசாலையில் முன்னெடுக்கும் சிறு அபிவிருத்தி திட்டங்கள் கூட அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கும். அல்லது அவர்களின் தனிப்பட்ட பெயர்களை பதிக்ககூடிய அபிவிருத்திகளாக இருக்கும். மஹிந்தோதய போன்ற திட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கும்.

ஆனால் நாம் இன்று நாடு முழுவதும் பல பாடசாலைகளுக்கு கட்டிடங்களை வழங்கியுள்ளோம். ஆனால் ஒரு கட்டிடத்துக்கும் ரணில் விக்ரமசிங்கவின் பெயரையோ, அகிலவிராஜின் பெயரையோ வைக்கவில்லை. “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” போன்ற திட்டங்களையே நாங்கள் முன்னெடுக்கிறோம்.

-Sabry

No comments:

Post a Comment