கொழும்பு மாநகர சபை, சுயேட்சை உறுப்பினர் கிருஷ்ணா புறக்கோட்டையில் வைத்து இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கிருஷ்ணா என அறியப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தனே இவ்வாறு இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டபோது உயிரழந்ததாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment