கூட்டாட்சி பங்காளிகள் அரசை நடாத்தும் விதத்தில் மக்கள் உணவுக்கும் கஷ்டப்படும் நிலை வந்துள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
இந்த அரசாங்கம் அபிவிருத்தியெனும் போர்வையில் போலி நாடாகமாடி வருவதாகவும் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து கொண்டே செல்லதாகவும் மேலும் தெரிவிக்கின்ற மஹிந்த, தமது ஆட்சிக்காலத்தின் பயனையே தொடர்ந்தும் மக்கள் அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்.
அத்துடன், நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டிற்குத் தான் நாடாளுமன்றில் பதிலளிக்க வேண்டுமாக இருந்தால் அர்ஜுன மகேந்திரனை ரணில் அழைத்து வரவேண்டும் எனவும் மஹிந்த நிபந்தனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment