தாய்லாந்து குகையில் சிக்கிய மேலும் நால்வர் மீட்பு - sonakar.com

Post Top Ad

Monday, 9 July 2018

தாய்லாந்து குகையில் சிக்கிய மேலும் நால்வர் மீட்பு



தாய்லாந்து, குகையொன்றுக்குள் சென்று சிக்கிக் கொண்ட சிறுவர் உதைபந்தாட்ட அணியொன்றைச் சேர்ந்த மேலும் நால்வர் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.


12 சிறுவர்களும் பயிற்றுனரும் இவ்வாறு சிக்கிக் கொண்டுள்ள நிலையில் நீண்ட போராட்டத்தின் பின் மீட்புப் பணிகள் இன்று ஆரம்பமானது. முதற்கட்டமாக நால்வர் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் நால்வர் மீட்கப்பட்டுள்ளனர்.


11 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட குறித்த குழுவினர் குகைப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த நிலையில் அங்கிருந்து வெளியேற முடியாது சிக்கிக் கொண்டிருந்தமையும் தற்போது உள்ளூர் மற்றும் சர்வதேச சுழியோடும் விற்பன்னர்கள் 56 பேர் அடங்கிய குழு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment