மஹிந்த ராஜபக்ச பிரதமரானால் ஜனாதிபதி தேர்தலுக்கு அவசியமிருக்காது என தெரிவிக்கிறார் வாசுதேச நானாயக்கார.
20ம் திருத்தச் சட்டத்தை கூட்டு எதிர்க்கட்சி ஆதரிக்காது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ச 2020 தேர்தலில் பிரதமராவது உறுதியெனவும் அதன் பின் ஜனாதிபதி தேர்தலுக்கு அவசியமிருக்காது என்பதால் அதற்கேற்ப சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் வாசுதேவ மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரையும் தயார் படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment