கள்ள நோட்டு அச்சடித்த குற்றச்சாட்டில் நவகத்தேகமயில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கம்பஹாவில் வசித்து வந்த குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த துறவியொருவரை நலம் விசாரிக்க வந்திருந்த நிலையில் 02 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுகளைக் கொண்டு பொருட்கள் கொள்வனவு செய்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில் குறித்த நபர் தங்கியிருந்த இடத்தில் மேற்கொண்ட சோதனையில் கள்ள நோட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment