இலங்கை வந்திருக்கும் ஈராக், பக்தாத் பல்கலை போராசிரியர் ஒருவரின் பெருந்தொகைப் பணம், அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் அடங்கிய பை ஒன்றைக் கண்டியில் கண்டெடுத்த அக்குறணையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் அதனை தூதரகம் ஊடாக அவரைத் தொடர்பு கொண்டு நேற்று கையளித்திருந்தனர்.
கைப்பையைக் கண்டெடுத்த இளைஞர்கள், உரிமையாளரைத் தொடர்பு கொள்ளும் நோக்கில் கண்டி குடுகலையில் அமைந்துள்ள ஐச்சி லைன் நிறுவனத்தின் அஸ்மி ஊடாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக பேராசிரியர் நேற்றைய தினம் கண்டிக்கு வரவழைக்கப்பட்டு அவரது உடமைகள் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, பேராசிரியர் முஹம்மத் அன்வர் மஹ்மூத் தனது மகிழ்ச்சியை வெளியிட்டதுடன் இலங்கையில் நடந்த இந்நெகிழ்வான சம்பவத்தை தான் ஒரு போதும் மறக்க இயலாது எனவும் இளைஞர்களின் செயற்பாட்டை நினைத்து பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.
மொஹமட் ரஸீம், ஆகில், நிஷாத், ஷப்னி, ஷாகிர், ஸஹ்ரான் ஆகியோரே கைப்பையைக் கண்டெடுத்து அதனைப் பத்திரமாக ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment