கொழும்பை நோக்கி மக்கள் சக்தி (ஜன பலய) எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
மஹிந்த அணியின் அனைத்து பிரிவுகளும் இதில் கலந்து கொள்ளும் எனவும் இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெரிதாக இது அமையும் எனவும் நாமல் மேலும் தெரிவிக்கிறார்.
அரசின் எதோச்சாதிகார நடவடிக்கைகள், தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தல் போன்ற விடயங்களை எதிர்த்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெறும் என கூட்டு எதிர்க்கட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment