விஜயகலா விவகாரத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கையெடுப்பது குறித்து அரசு ஏலவே தீர்மானித்திருந்த நிலையில் கடந்த செவ்வாய் நாடாளுமன்ற அமர்வைக் குழப்பிய கூட்டு எதிர்க்கட்சியுறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கிறார் ரணில்.
தானும் சபாநாயகரும் ஏலவே தீர்மானித்ததன் பிரகாரமே சபாநாயகர் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாகவும் இவை அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வைக் குழப்பியமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரணில் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அன்றைய கூட்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கை மூலம் நாடாளுமன்றில் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment