கூட்டு எதிர்க்கட்சியினரைப் பிடிப்பதற்கு பொலிசாரை அவர்கள் பின்னால் அனுப்பி, இராணுவம் மற்றும் நீதித்துறையையும் அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ள நிலையிலேNயு தற்போது பாதாள உலகம் மீண்டும் தலையெடுத்து நாளாந்தம் கொலைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
இந்நிலையில் தாமே பாதாள உலகத்தைக் கட்டுப்படுத்தப் போவதாக அரசாங்கம் தெரிவிப்பது வேடிக்கையானது எனவும் அமைச்சர்களுக்கு பாதாள உலகத்தினர் பாதுகாப்பளிப்பதாக பொலிசாரே சொல்வது அரசின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மஹிந்த ஆட்சியிலேயே பாதாள உலகத்தினர் பாதுகாக்கப்பட்டதாக அண்மையில் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment