கல்கிஸ்ஸ நீதிமன்றுக்குள் 22 சிறிய பக்கற்றுகளில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற ரத்மலானையைச் சேர்ந்த 26 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் பாரிய அளவில் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றுக்குள்ளேயே இவ்வாறு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
சிறைச்சாலைகளிலும் போதைப் பொருள் விநியோகம் இடம்பெறுவதோடு அங்கிருந்தே வெளியில் நடக்கும் போதைப் பொருள் வர்த்தகம் கட்டுப்படுத்தப்பட்டும் சம்பவங்கள் பற்றியும் அவ்வப்போது பொலிசார் தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment