ஆண்மையற்றவர்களே அமைச்சர்களாக இருக்கிறார்கள்: மேர்வின்! - sonakar.com

Post Top Ad

Thursday, 5 July 2018

ஆண்மையற்றவர்களே அமைச்சர்களாக இருக்கிறார்கள்: மேர்வின்!


விஜயகலா விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவு ஆண்மையற்றவர்களே அமைச்சர்களாக இருப்பதாக தெரிவிக்கிறார் மேர்வின் சில்வா.


பிரபாகரன் எனும் கொடிய மனிதனைக் கொன்றொழித்த பின்னர் இவ்வாறு அரசிலிருந்தே ஒருவர் பேசியிருப்பது அதையே எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கும் மேர்வின்,  அமைச்சர்கள் மற்றும் ஆளுந்தரப்பினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்ய விஜயகலா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment