கிளிநொச்சியில் சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் விசேட அதிரடிப்படையிரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று(9) மாலை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து கனகபுரம் பகுதியில் டொல்பின் ரக வாகனத்தில் வைத்து குறித்த சங்குடன் இருவர் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாளை கிளிநொச்சி பொலிசார் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இருப்பினும் மீட்கப்பட்ட சங்கு பெரிய அளவில் இருப்பதுடன் இது இடம்புரி சங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment