பாதாள உலக பேர்வழிகளை பாதுகாக்கும் அமைச்சர்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 July 2018

பாதாள உலக பேர்வழிகளை பாதுகாக்கும் அமைச்சர்!


அரசியல்வாதிகளின் ஆதரவிலேயே பாதாள உலக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வெளிப்படையான குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில் பொலிசாரினால் தேடப்படும் முக்கிய பாதாள உலக பேர்வழிகள் ஐவரை கூட்டாட்சி அமைச்சர் ஒருவர் தனது மெய்ப்பாதுகாவலர்களாக நியமித்துப் பாதுகாத்து வருவது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த நபர்களில் ஒருவர் ஏலவே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட போதிலும் அமைச்சரின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கூட்டாட்சியில் பாதாள உலக நடவடிக்கைகள் தலைவிரித்தாடுவதுடன் ஸ்ரீலங்கா பொலிஸ் சுயாதீனமாக இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment