சிங்கப்பூர் சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அங்கு முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை இரகசியமாக சந்திக்கவுள்ளதாக தமக்கு 'தகவல்' கிடைத்துள்ளதென தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
அர்ஜுன் மகேந்திரன் ஊடாக புதிதாக கடன் பெறும் திட்டமொன்று தீட்டப்பட்டிருந்த நிலையிலேயே சிங்கப்பூர் சென்றுள்ள ரணில் இச்சந்திப்பில் கலந்து கொள்வதாகவும் விமல் மேலும் தெரிவித்துள்ளார்.
உதயங்க வீரதுங்கவை மஹிந்த அழைத்து வந்தால் அர்ஜுன் மகேந்திரனை ரணில் அழைத்து வர வேண்டும் என அண்மைக்காலமாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment