போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க அமைச்சரவை இணங்கியுள்ள நிலையில் 19 பேரின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கையொப்பமிடவுள்ளார்.
2009 யுத்த நிறைவின் பின் இலங்கை போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை உடனடியாக இவ்வெண்ணத்தைக் கை விட வேண்டும் எனவும் மீள முடியாத தண்டனையே மரண தண்டனையெனவும் அதனை அனுமதிக்க வேண்டாம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment