வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் 600 பேர் வருடாந்தம் சராசரியாக மரணிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க.
வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களிலும் அங்குள்ள இலங்கையர்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாகவும் இது தொடர்பில் அரசின் காத்திரமான நடவடிக்கை தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர் நலன் தொடர்பில் நீண்டகாலமாக கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்ற போதிலும் தீர்வுகள் வழங்கப்படாத நிலையே தொடர்வதாக விசனம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment