50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 40 வயது பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2009 யுத்த நிறைவின் பின் இலங்கை ஆசியாவின் போதைப் பொருள் மையமாக இயங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தொடர்ச்சியாகப் பெருந்தொகை போதைப பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இலங்கை போதைப் பொருள் வர்த்தகத்தின் 60 வீதத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக சித்தரிக்கப்பட்ட வெலே சுதா மரண தண்டனை வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையிலும் பாரிய அளவில் போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment