இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செலுத்த வேண்டிய 87.5 மில்லியன் டொலர் கடனில் ஐந்து மில்லியனை அடுத்த வாரம் செலுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கை நாணய மதிப்புப்படி 13.4 பில்லியன் ரூபா கடன் நிலுவையில் உள்ள நிலையில் ஸ்ரீலங்கனுக்கு பெற்றோல் வழங்குவதை நிறுத்தப் போவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக 5 மில்லியன் டொலரை அடுத்த வாரம் செலுத்தப் போவதாக ஸ்ரீலங்கன் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment