வியாழன் இரவு முதல் வெள்ளி காலை வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
16,422 பொலிசார் அடங்கிய விசேட படையணியொன்று பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவின் பேரில் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், சட்ட விரோத ஆயுதம் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்தவர்கள் உள்ளடங்களாகவே இவ்வாறு பெருந்தொகையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஞானசார எனும் தனி நபரைத் தேடி நான்கு விசேட படையணிகள் களமிறங்கியும் அவரைக் கைது செய்ய முடியாது போயிருந்ததாக ஸ்ரீலங்கா பொலிஸ் பகிரங்கமாக அறிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment