மஹிந்த ராஜபக்ச குடும்பம் டுபாயில் பதுக்கி வைத்திருக்கும் சுமார் 3300 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மீளப் பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
குடும்பத்தவர்களின் பெயர்களில், மூன்று வங்கிக் கணக்குகளில் 1086 மில்லியன் டொலரும் பிறிதொரு வங்கிக் கணக்கில் 500 மில்லியன் டொலரும் வைப்பிலிடப்பட்டுள்ள அதேவேளை முன்னாள் செயலாளர் மற்றும் தவிசாளர் ஒருவரின் பெயரில் கூட்டு வங்கிக் கணக்கொன்றில் 1800 மில்லியன் டொலரும் உள்ளதாக ராஜித விபரம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங்கிலும் மஹிந்த குடும்பத்தினர் இவ்வாறு பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் அவற்றை மீளப்பெறவும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் மேலும் தெரிவிக்கின்றமையும் 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரம்பித்து இதுவரை இவ்வாறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment