கல்குடாவில் தொழிற்சாலை ஒன்றை நிறுவவதற்கான அறிக்கையொன்றைப் பெற்றுக்கொடுக்க மூன்று இலட்ச ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரியொருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோறறைப்பற்றில் வைத்து லஞ்சம் பெற்ற வேளையிலேயே கல்குடா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்திய வர்த்தகரிடம் லஞ்சம் பெறுகையில் கைதான முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment