2014ம் ஆண்டு இலங்கையின் சிங்கள மன்னனாகத் தம்மை பிரித்தறிந்து கொண்ட மஹிந்த ராஜபக்சவின் முழு அனுசரணையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அளுத்கம வன்முறையில் பாதிக்கப்பட்ட 122 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான இழப்பீடாக 188 மில்லியன் ரூபா வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் இதற்கான நிகழ்வொன்று நாளை 26ம் திகதி பி.பகல் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கூட்டாட்சியின் பதவிக்காலத்தில் கிந்தொட்ட, அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் பாரிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமையும் வழமை போன்று பொலிசாரும் இராணுவமும் ஆரம்பத்தில் கைகட்டிப் பார்த்திருந்த நிலையில் அதுவும் மஹிந்த தரப்பின் சதிச் செயல் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment