பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததன் பின்னணியில் அரசை விட்டு விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16 உறுப்பினர்கள் தனிக் கட்சியாக இயங்குவதற்கு ஆலோசிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னணியில், ஏ.எஸ்.பி. லியனகேவின் தொழிலாளர் கட்சியை விலைக்கு வாங்கும் முயற்சி இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த அணியோடு இணைந்து கொள்ளவுள்ளதாக அவ்வப்போது தெரிவித்து வந்த போதிலும், தனித்தியங்கும் அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கப்போவதாக கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றமையும் இவர்களை வரவேற்கக் காத்திருப்பதாக முன்னர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment