File photo
களுபோவில மற்றும் சுபுதிபுர பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான 102 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நேற்றிரவு முதல் இடம்பெற்ற தேடலின் பின்னணியில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த பெறுமதி 1.2 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த நிறைவின் பின்னர் இலங்கை போதைப் பொருள் மையமாக உருவாகியிருந்ததாக ஹர்ஷ டி சில்வா கடந்த வருடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment