ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் இரு பிரதான முஸ்லிம் சமூக அமைப்புகளுக்கிடையிலான நேரடி சந்திப்பொன்று இன்று லெஸ்டர் நகரில் இடம்பெற்றது.
லெஸ்டரில் வாழும் சமூக ஆர்வலர் யூனுஸ் ஒஸ்மானின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம்களுக்கான புலம் பெயர் அமைப்பு (SLMDI) மற்றும் கொஸ்மோஸ் அமைப்பின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் உட்பட சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விரு அமைப்புகளும் எதிர்கால நடவடிக்கைகளில் சுயாதீனமாக இயங்குகின்ற அதேவேளை இரு அமைப்புகளுக்கிடையில் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பை நல்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இரு அமைப்புகளும் சமூகப் பணிகளை தமக்கிடையில் பகிர்ந்து கொள்வது குறித்தும் பேசப்பட்டிருந்த நிலையில் நிகழ்வு ஆரோக்கியமான கலந்துரையாடலுடன் நிறைவு பெற்றது.
ஏற்பாட்டாளர் யூனுசுக்கு உதவியாக லெஸ்டர் வாழ் முஸ்லிம் சமூகம் சார்பாக சில சகோதரர்களும், அஷ்ஷெய்க் இஸ்மாயில் மற்றும் ஊடகவியலாளர் இர்பான் இக்பாலும் நிகழ்வில் நடுநிலையாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.
இரு அமைப்பின் தலைவர்களான அசாஹிம் முகமது மற்றும் மீராலெப்பை நசீர் மற்றும் செயலாளர்களான லியாஸ் வாஹித், அப்ஹாம் இஸ்மயில் மற்றும் இரு தரப்பு உறுப்பினர்களும் சந்திப்பு திருப்தியாக இருந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
ஒற்றுமை பற்றி நபிகளார்:
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!
1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சாலிஹ் பின் கைசான் அவர்களது அறிவிப்பில், "உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், "மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்.
(ஸஹீஹ் முஸ்லிம் # 5079)
Post a Comment