UK: ஸ்லவ் (SLOUGH) மஸ்ஜிதுல் ஜன்னாவில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்! - sonakar.com

Post Top Ad

Friday, 18 May 2018

UK: ஸ்லவ் (SLOUGH) மஸ்ஜிதுல் ஜன்னாவில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்!


இலங்கை முஸ்லிம்களின் நிர்வாகத்தில் ஸ்லவ் நகரில் சிறப்பாக இயங்கி வரும் மஸ்ஜிதுல் ஜன்னாவில் வழமை போன்று இம்முறையும் ரமழானை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதனடிப்படையில் சனி, ஞாயிறு மற்றும் புதன் ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவுகளும் தினமும் மாலை 6 - மணி வரை அல்குர்ஆன் சிறப்புப் பார்வை, மஃரிபுக்கு முன்பாக 30 நிமிடம் சிறப்பு பயான், தராவீஹ்க்கு முன்பதாக 10 நிமிடங்கள் தப்சீர், பஜ்ரு தொழுகையைத் தொடர்ந்து தினம் ஒரு ஹதீஸ் விளக்கம் போன்ற நிகழ்வுகளும் இடம்பறுகின்றன.

தற்போதைய நேர அடிப்படையில் இரவு 22.35 மணிக்கு தராவீஹ் தொழுகை ஆரம்பிக்கின்றமையும் மஃரிப் தொழுகையையடுத்து இப்தார் உணவு பரிமாறப்படுகின்றமையம் பெண்களுக்கான பிரத்யேக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-உசைர் உமர்தீன், பொதுச் செயலாளர் (மஸ்ஜித் அல் ஜன்னா)

No comments:

Post a Comment