அக்குறணை முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கு பற்றிய Toastmasters பயிற்சி நிகழ்ச்சி திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவ பண்புகளை விருத்தி செய்யும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு டீ 82 டோஸ்மாஸ்டர்ஸ் அமைப்பினால் பத்து அமர்வுகளில் நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியில் 54 மாணவிகள் பங்குபற்றியதுடன் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற Toastmasters சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கண்டி Toastmasters குழுவினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு சாருதீன் மற்றும் டோஸ்மாஸ்டர்ஸ் சர்வதேச அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு மஹேஷ் ஜயசிங்ஹ ஆகியோருடன் பாடசாலை அதிபர் ரிஹானா ஸெயின்,பிரதி அதிபர்களான திரு ஹம்சா,திருமதி சுஹீரா, ஆசியர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment