கூட்டாட்சி அரசு உருவாக்கப்பட்டதோடு தோற்றுவிக்கப்பட்ட நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆரம்ப காலத்தில் அதிரடி விசாரணைகளை நடாத்தி அரசியல் களத்தை சூடாக்கியிருந்தது.
எனினும் நாளடைவில் இவ்விசாரணைகளின் பின்னணியில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென மக்கள் ஆதங்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியிருந்தது. ஆயினும், தொடர்ந்து பல்வேறு நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவதன் தொடர்ச்சியில் முன்னாள் அமைச்சர் T.B ஏக்கநாயக்க இன்று விசாரணைக்கு சமூகமளித்துள்ளார்.
கலாச்சார அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் வாகன துஷ்பிரயோகம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment