
அநுராதபுரத்தில் இரவு கேளிக்கை விடுதி நடாத்தி பௌத்த கலாச்சாரத்தைக் கெடுப்பதாகக் கூறி அதன் உரிமையாளரும் கராத்தே வீரருமான வசந்த சொய்சாவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையிலிருக்கும் SF லொக்கா என அறியப்படும் நபர், அங்கிருந்தே அநுராதபுரத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விலையுயர்ந்த போதைப்பொருள் பக்கற்றுகளுடன் குறித்த நபரின் பள்ளிக் கால நண்பர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஐந்து மில்லியன் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment