அரசியல் எதிர்காலம் பற்றிய கவலையிருந்தால் பதவிகளைக் கைவிட்டு கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் குமார வெல்கம.
புதிய அமைச்சரவையில் சு.க வசமிருந்த இரு அமைச்சுப் பொறுப்புகள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை இணக்கப்பாட்டுடன் செயற்படக் கூடிய சிலர் தொடர்ந்தும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
2020 வரை கூட்டாட்சி தொடரும் என்பதில் இரு தரப்பும் உறுதியாக உள்ள நிலையில் குமார வெல்கம இவ்வழைப்பை விடுத்துள்ளமையும் மே 8ம் திகதி நாடாளுமன்ற அமர்வின் போது குரூப் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment