
நாட்டின் கடன் சுமை பற்றி பேசித் திரியும் மஹிந்த ராஜபக்ச முடிந்தால் தன்னோடு நேருக்கு நேர் விவாதிக்க வரவேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர விடுத்த சவாலை நிராகரித்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, மஹிந்த அப்படியொரு விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள மஹிந்தானந்த அளுத்கமகே, பிரிவினைவாதிகளிடமிருந்த காப்பாற்றி நாட்டை ஒற்றுமைப்படுத்திய மஹிந்த வங்குரோத்து அரசின் பிரதிநிதிகளுடன் அமர்ந்து பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த அரசு முஸ்லிம்களையும் தனிமைப்படுத்தி அடக்கியாள்வதற்கு பௌத்த பேரினவாதத்தை உருவாக்கி, ஆதரவளித்து வளர்த்து விட்டிருந்தமையும் அண்மைய திகன வன்முறைகளுக்கு மஹிந்த அணியின் உறுப்பினர்களே காரணம் என மைத்ரி அரசு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment