
கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் குரூப் 16 முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
எனினும், நாடாளுமன்றுக்குள்ளும் வெளியிலும் தாம் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கமாக இன்றி தனிக்குழுவாகவே குரூப் 16 இயங்கவுள்ளதாகவும் மஹிந்த அணிக்கும் மைத்ரி அணிக்குமிடையிலான பாலமாகத் திகழவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்ததன் பின்னணியில் சு.க வின் குரூப் 16 அரசை விட்டு விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment