நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையிலிருந்து மீள அமைச்சரவை மறு சீரமைப்பினால் எந்தப் பிரயோசனமுமில்லையென தெரிவிக்கின்ற பொதுஜன பெரமுன தலைவர் ஜி.எல். பீரிஸ், உடனடியாக அரசாங்கத்தைக் கலைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொருளாதார சீர் குலைவு, அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு என மக்கள் பாரிய துன்பங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் அரசாங்கம் எவ்வாறு அமைய வேண்டும் எனும் தீர்ப்பை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதனடிப்படையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியுற்ற பின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பின் பால் மஹிந்த அணி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment