FB நண்பர்கள் இணைந்து செய்த சமூகப் பணி - sonakar.com

Post Top Ad

Thursday, 3 May 2018

FB நண்பர்கள் இணைந்து செய்த சமூகப் பணி


முகநூல் என்பது வெறுமனே அரட்டைகள் அடிக்கும் இடம் என்பதினை தகர்த்தெறிந்து நண்பர்கள் மூலம் சுமார் ஒரு லட்சத்துக்கு மேலதிகமான நிதி திரட்டி ஆதரவற்ற குழந்தைகளின் கல்வித்தேவைக்காக நவீன போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று சிறுவர் மேம்பாட்டு நிலையம் ஒன்றுக்கு கடந்த 29-04-2018 அன்று கையளிக்கப்பட்டது.

கண்டி திகனையில் இருக்கும் THE GURDIAN சிறுவர் மேம்பாட்டு நிலையத்தினால் 2018-04-16 அன்று எமது நண்பர்களின் இயக்கத்தில் இயங்கும் பரகத் நிதியத்திற்கு (OPEN ARMS) போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று அவசியம் என ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 


இதை கவனத்திற் கொண்ட பரகத் நிதியம் (OPEN ARMS) நிர்வாகிகள் வெளிநாட்டு வாழ் நண்பர்களை முகநூல் வழியாக தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.

அக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுடன் முகநூல் வழியாக நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்றினை உடனுக்குடன் அமுல் படுத்தி நான்கு நபர்களின் மேற்பார்வையிலும் சக நண்பர்களின் ஆலோசனைகளுடனும் டயலோக் ஈசி கேஸ் மற்றும் பரகத் நிதியத்தின் வங்கி கணக்கினூடாகவும் நிதிகளை சேகரித்து அவர்களுக்கு தேவையான அந்த நவீன போட்டோ கொப்பி இயந்திரத்தை குறிப்பிட்ட சில நாட்களிலேயே பெற்றுகொடுத்தோம்.


சுமார் 15 குழந்தைகளை கொண்ட அந்நிறுவனத்தில் மேலும் சில தேவைப்பாடுகள் உள்ள வண்ணம் இருக்கின்றன இருந்தும் எம்மாலான இவ்வுதவியை குறிப்பிட் சில நாட்களுக்குள் நண்பர்கள் மூலமாக வித்தியாசமான முறையில் அணுகி  இந்த இயந்திரத்தையும் அவர்களுக்கு தேவையான சில பொருட்களையும் பெற்றுக் கொடுத்தோம் அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் இத்திட்டத்தில் எம்முடன் இணைந்து பயணம் செய்து நிதிகளை தந்துதவிய தனவந்தர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் பரகத் நிறுவனமும் இத்திட்டத்தில் தலைமை தாங்கிய நிர்வாகிகளும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


-ஜஸாக்கல்லாலாஹு கைரன்-
Barakath Foundation (Open Arms)

No comments:

Post a Comment